/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முன்னாள் சபாநாயகர் நினைவு தின உதவி
/
முன்னாள் சபாநாயகர் நினைவு தின உதவி
ADDED : செப் 22, 2024 03:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
-திருமங்கலம், : முன்னாள் சபாநாயகர் முத்தையாவின் 2ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மாவட்ட செயலாளர் மணிமாறன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக டி.கல்லுப்பட்டி அருகே முத்தப்பன்பட்டியில் உள்ள முத்தையாவின் நினைவிடத்தில் அமைச்சர்கள் நேரு, சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மூர்த்தி, எம்.எல்.ஏ., தளபதி, முன்னாள் எம்.பி., சித்தன் மற்றும் கட்சியினர், மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
நேற்று காலை மணிமாறன் தலைமையில் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டு ரூ.ஒரு கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.