ADDED : மார் 02, 2026 06:45 AM
அ நிறம் | அளவு
திருமங்கலம்: திருமங்கலம் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயற்குழு கூட்டம் தலைவர் மகபூபாட்ஷா தலைமையில் நடந்தது.
அமைப்புச் செயலாளர் முருகேசன் வரவேற்றார். செயலாளர் ரகுநாதன் அறிக்கை வாசித்தார். இணைச் செயலாளர் நடராஜன் அறிக்கை வாசித்தார். திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்ட பாலத்திற்கு 'வீரபாண்டிய கட்டபொம்மன்' பெயர் சூட்டிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆலோசகர் வெங்கிட கிருஷ்ணன், நிர்வாகிகள் நடராஜன், வையத்துரை, திருவள்ளுவன், ஜெயந்தி, பிரேமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
