ADDED : ஏப் 26, 2026 11:45 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை எஸ்.ஆர்.எம்.யூ., ரயில்வே தொழிற்சங்க அலுவலகத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் - பொறியாளர் ஐக்கிய சங்க மாநில செயற்குழு கூட்டம், மண்டல செயலாளர் பழனிசாமி தலைமையில் நடந்தது.
மாநில தலைவர் கண்ணன், நிர்வாகிகள் வீராச்சாமி, கருப்பசாமி, வினோத் பேசினர். பொதுச்செயலாளர் சுப்ரமணியன் பேசுகையில், ''மின்சார வாரியத்தில் களப்பணி பிரிவில் 38 ஆயிரம் காலிப் பணியிடங்கள் இருந்தும் நுகர்வோருக்கு திருப்தியான சேவை வழங்கப்படுகிறது. பணிச்சுமையை குறைக்கும் வகையில் புதிதாக அமையவுள்ள அரசு, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,'' என்றார். இதில் மதுரை மண்டல செயலாளராக இமானுவேல் தனபாலன், மகளிரணிச் செயலாளராக ரம்யா, மாநில செயலாளராக ரவி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
