நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : அம்பலகாரன்பட்டியில் தமிழ்நாடு விவசாய சங்க புதிய கிளை கூட்டம் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் கதிரேசன் தலைமை வகித்தார்.
இதில் தலைவராக கந்தப்பன், செயலாளராக மழுவேந்தி, பொருளாளராக சிவலிங்கம், நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அலங்காநல்லுார் சர்க்கரை ஆலை இயக்குவதாக தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு திறக்காத தி.மு.க., அரசை கண்டித்தும், தனியாமங்கலம், மேலுார் பாசன கால்வாய்களை பராமரிப்பு நிதி ரூ.2.50 கோடி குறித்து கலெக்டர் விசாரிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினர்.