ADDED : செப் 05, 2026 04:29 AM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகர் லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் தங்கராஜ், நந்தகுமார், முத்துராம லிங்கம், முருகேசன், அறிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தலைவராக செல்வராஜ், செயலாளராக இனியன், பொருளாளராக அருண்குமார் பொறுப்பேற்றனர். நலத்திட்ட உதவிகளாக வி.பெருமாள்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி நுாலகத்திற்கு 10 நாற்காலிகள், கீழச்செம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கினர்.
சிறந்த சேவையாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். டாக்டர்கள் ரவீந்திரன், சந்திரன், லயன்ஸ் சங்கத்தினர் பங்கேற்றனர்.
