நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத அரசு உதவி பெறும் பள்ளிகளின் உரிமை மீட்புக்குழுவின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நடந்தது.
செயலாளர் கனகராஜ் தலைமை வகித்தார். அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வலியுறுத்தப்பட்டது. குழுவின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநில அமைப்பாளர் பாதிரியார் ஜான் கென்னடி, துணை அமைப்பாளர் லட்சுமிவாசன், இணை அமைப்பாளர் பாதிரியார் டோமினிக் கடாட்சதாஸ், மாவட்ட அமைப்பாளர் தனபால் ஜெயராஜ் பங்கேற்றனர்.