/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பேரையூரிலிருந்து நேரடி பஸ் இயக்க எதிர்பார்ப்பு
/
பேரையூரிலிருந்து நேரடி பஸ் இயக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜன 17, 2026 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தவர்கள் நாளை(ஜன.,18) முதல் மீண்டும் வெளியூர் செல்ல இருப்பதால் பேரையூரிலிருந்து சென்னை, கோவை, திருப்பூருக்கு நேரடி பஸ்கள் இயக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். பேரையூர் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கோவை, திருப்பூர், சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் வேலை செய்கின்றனர்.
மாணவர்கள் சென்னை, கோவையில் படிக்கின்றனர்.
பொங்கல் பண்டிகையை கொண்டாட பேரையூர் பகுதிக்கு வந்த இவர்கள் சிரமமின்றி திரும்ப போதிய பஸ்களை அரசு போக்குவரத்து கழகம் இயக்க வேண்டும்.

