/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பொங்கலுக்கு மதுரை-சென்னை இடையே 'மெமு' ரயில்; கடந்தாண்டை போல் இயக்கப்படுமா என எதிர்பார்ப்பு
/
பொங்கலுக்கு மதுரை-சென்னை இடையே 'மெமு' ரயில்; கடந்தாண்டை போல் இயக்கப்படுமா என எதிர்பார்ப்பு
பொங்கலுக்கு மதுரை-சென்னை இடையே 'மெமு' ரயில்; கடந்தாண்டை போல் இயக்கப்படுமா என எதிர்பார்ப்பு
பொங்கலுக்கு மதுரை-சென்னை இடையே 'மெமு' ரயில்; கடந்தாண்டை போல் இயக்கப்படுமா என எதிர்பார்ப்பு
ADDED : ஜன 13, 2026 05:55 AM

மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை - சென்னை இடையே முன்பதிவில்லா பெட்டிகள் கொண்ட 'மெமு' (மெயின் லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட்) வகை ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குமா என பயணிகள் எதிர் பார்ப்பில் உள்ளனர்.
இந்தாண்டு பொங்கல் பண்டிகை ஜன.15ல் தொடங்குகிறது. ஞாயிறு விடுமுறையை சேர்த்து 4 நாட்கள் தொடர் விடுமுறை உள்ளதாலும், ஜல்லிக் கட்டு போட்டிகளை காணவும் லட்சக்கணக்கானோர் மதுரை வருவர். பாண்டியன், வைகை உள்ளிட்ட ரயில்களில் 2 மாதங் களுக்கு முன்பே டிக் கெட்டுகள் முடிந்துவிட்டன.
தெற்கு ரயில்வே அறிவித்த பொங்கல் சிறப்பு ரயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் நீண்டுள்ளது. 2024 தீபாவளி, 2025 பொங்கல், ஆயுதபூஜை, தீபாவளிக்கு மதுரை - சென்னை இடையே 12 பெட்டிகள் கொண்ட 'மெமு' வகை ரயில்கள் இயக்கப்பட்டன. கடந்தாண்டு ஆயுத பூஜையை முன்னிட்டு மதுரை கோட்டம் முன்பதிவில்லா டிக்கெட் வருமானம் மூலம் ரூ1.03 கோடி வரை ஈட்டியது. அதில் மெமு ரயில்கள் முக்கிய பங்கு வகித்தன.
பொதுவாக குறுகிய துார ஊர்களுக்கு இடையே இயக்கப்படும் மெமு ரயில்கள், பயணிகள் நலன் கருதி மதுரை - சென்னை இடையே மெயின் லைனில் இயக்கப்பட்டன. நாட்டிலேயே அதிக துாரம் இயக்கப்பட்ட மெமு ரயிலாகவும் கருதப்பட்டது. இவ்வகை ரயில்கள் முற்றிலும் முன்பதிவில்லா பெட்டிகள் கொண்டதால் குறைந்த கட்டணத்தில் விரைவாக செல்ல முடியும். ஒரு பெட்டியில் 1000 பேர் வரை பயணிக்க முடியும். கழிப்பறை வசதி இருப்பதால் முதியவர்கள், பெண்கள், குழந்தை களுக்கு பயனுள்ளதாக அமையும்.
இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மெமு ரயில்கள் குறித்து அறிவிக்கப்படாதது பயணி களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் மதுரை - சென்னை இடையே மெமு ரயில் களுக்கான அறிவிப்பு நாளையாவது வருமா என எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
பயணிகள் கூறியதாவது:
இந்தாண்டு பொங்கலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் முன் பதிவு பெட்டிகள் குறைவு. மதுரை வழியாக நாகர்கோவில் - தாம்பரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் 'ஏசி' பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. குளிர்காலத்தில் 'ஏசி' சிறப்பு ரயில்களை இயக்குவதால் முதியோர், குழந்தை களுக்கு சிரமம் ஏற்படுவதுடன் கட்டணமும் அதிகம்.
பொங்கல் பண்டிகைக்கு ஆம்னி பஸ்களில் மதுரை - சென்னை இடையே செல்ல ரூ.3000 வரை வசூலிக்கின்றனர். ஆனால் மெமு போன்ற முன்பதிவில்லா ரயில்களில் கட்டணம் ரூ.200க்குள் அடங்கி விடும். எனவே ஏழை, நடுத்தர மக்களை கருத்தில் கொண்டு சென்னை - மதுரை - சென்னை இடையே மெமு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்க வேண்டும் என்றனர்.

