தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஏற்றுமதி மேம்பாட்டு கருத்தரங்கு

ஏற்றுமதி மேம்பாட்டு கருத்தரங்கு

ஏற்றுமதி மேம்பாட்டு கருத்தரங்கு


ADDED : மார் 07, 2024 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2024 05:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரியம் சார்பாக வேளாண் விளைபொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு கருத்தரங்கு மதுரையில் நடந்தது.

மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்ட முன்னோடி விவசாயிகள், மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொழில் முனைவோர்கள், வேளாண் வணிக துணை இயக்குநர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கலெக்டர் சங்கீதா துவக்கி வைத்தார். வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ், வேளாண் வணிக துணை இயக்குநர்கள் மெர்ஸி ஜெயராணி, தமிழ்ச்செல்வி, ரமேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராணி, தோட்டக்கலை உதவி இயக்குநர் ஜெசிமாபானு, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் முரேஷ்குமார், நபார்டு வங்கி வளர்ச்சி மேலாளர் சக்திபாலன், மதுரை வேளாண் ஆராய்ச்சி நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் பங்கேற்றனர்.

வேளாண் ஏற்றுமதிக்கான அபேடா அமைப்பு மண்டல அதிகாரி ஷோபனாகுமார், ஏற்றுமதி மேம்பாட்டு மையத் தலைவர் திருப்பதிராஜன், மதுரை, தமிழ்நாடு அபெக்ஸ் சுரேஷ்குமார், பயிர்பாதுகாப்பு அலுவலர் ஸ்ரீஹர்ஷா, பேராசிரியர்கள் முரளிதரன், அமுதசுரபி, தனம் தொழில்நுட்ப விளக்கம் அளித்தனர்.

ஏற்றுமதியில் சந்திக்கும் சவால்கள் குறித்து, ஏற்றுமதியாளர்கள் ஹரிணி, முஜிபுர்ரகுமான், முருகேசன், தினேஷ், ரமேஷ், செந்தில்காசி, அருணாச்சலம், குமரேசன், சுபாஷினி, தர்மேந்திரா கலந்துரையாடினர். வேளாண் அலுவலர்கள் மலர்விழி, மீனா ஏற்பாடுகளை செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us