ADDED : மார் 04, 2024 05:38 AM
அ நிறம் | அளவு
திருநகர்: மதுரை மாவட்ட பார்வை இழப்பு மற்றும் தடுப்புச் சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை, மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வணிகவியல் துறை உயராய்வு மையம் சார்பில் திருநகரில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
வணிகவியல் துறை மூத்த பேராசிரியர் கணேசன் துவக்கி வைத்தார். பேராசிரியர்கள் அற்புதராஜ், சுரேஷ்பாபு, தேவிகா, கஜபிரியா, மாணவியர் பங்கேற்றனர்.
அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் 250 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு கண் பரிசோதனை செய்தனர். அவர்களில் 21 பேர் இலவச ஆபரேஷனுக்காக தேர்வு செய்யப்பட்டனர்.
