/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருப்பரங்குன்றம் கோவிலிலும் வெடித்தது போலி சான்று சர்ச்சை
/
திருப்பரங்குன்றம் கோவிலிலும் வெடித்தது போலி சான்று சர்ச்சை
திருப்பரங்குன்றம் கோவிலிலும் வெடித்தது போலி சான்று சர்ச்சை
திருப்பரங்குன்றம் கோவிலிலும் வெடித்தது போலி சான்று சர்ச்சை
ADDED : பிப் 16, 2025 02:14 AM
மதுரை: மதுரை மாவட்டம், மீனாட்சி அம்மன் கோவிலில் சேவுகர் உள்ளிட்ட பணிகளில் சேர்ந்தவர்களில், 27 பேர் போலி கல்விச்சான்று கொடுத்து பணியாற்றுகின்றனர். இதுகுறித்து, நம் நாளிதழ் சுட்டிக்காட்டியதை தொடர்ந்து, அறங்காவலர் குழு விசாரணை நடத்தியது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதேபோல், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் சில ஊழியர்கள் உரிய கல்வி தகுதியின்றி பணிபுரிகின்றனர். குறிப்பாக, கோவிலில் மின் தொழில்நுட்ப பணியாளர் என்ற பதவியே கிடையாது. ஆனால், அந்த பதவியில் ஒருவர் பணியாற்றி வருகிறார்.
பொதுவாக அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் மின் பணியாளராக சேரும் போது இருக்க வேண்டிய, 'பி' உரிமம் இவரிடம் இல்லாமல் பணியாற்றி வருகிறார். இதுகுறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டபோது, 'இதுவரை கோவில் நிர்வாகத்திடம் வழங்கவில்லை' என, பதில் தரப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச கல்வித்தகுதி, அனுபவத்தின் அடிப்படையிலும், தி.மு.க., அனுதாபி என்பதாலும் அந்த ஊழியரை அறங்காவலர்கள் குழு பணியில் சேர்த்துள்ளது. இதேபோல் பல ஊழியர்கள் போதிய கல்வி தகுதியின்றி பணிபுரிகின்றனர். கோவில் துணை கமிஷனர் சூரியநாராயணனிடம் கேட்டபோது, “இதுகுறித்து விசாரிக்கப்படும்,” என்றார்.

