/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போலி நகை அடகு வைத்து ரூ.15.72 லட்சம் மோசடி
/
போலி நகை அடகு வைத்து ரூ.15.72 லட்சம் மோசடி
ADDED : பிப் 10, 2025 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்; மதுரை மாவட்டம், மேலுார் அண்ணாநகர் காலனி ஆறுமுகம் மனைவி ஈஸ்வரி 38. இவர் திருப்புவனத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் நான்கு முறை 336.03 கிராம் நகை அடகு வைத்து, பணம் பெற்றிருந்தார்.
பிப்., 6 ம் தேதி வங்கி மேலாளர் சுவாமிநாதன் நகைகளை சோதனை செய்தார். அப்போது ஈஸ்வரி அடகு வைத்த நகையில் 168.15 கிராம் போலி நகை இருந்தது தெரிந்தது. இந்த நகைக்காக அவர் வங்கியில் ரூ.15.72 லட்சம் பெற்றுள்ளார். மேலாளர் புகாரின் பேரில் திருப்புவனம் போலீசார் ஈஸ்வரி மீது வழக்கு பதிந்துள்ளனர்.

