தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குடிநீர் இணைப்பின்றி தவிக்கும் குடும்பங்கள்

குடிநீர் இணைப்பின்றி தவிக்கும் குடும்பங்கள்

குடிநீர் இணைப்பின்றி தவிக்கும் குடும்பங்கள்


ADDED : செப் 07, 2026 09:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2026 09:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை – தேனி ரோட்டில் காளவாசல் முதல் மேலக்கால் ரோடு பிரிவு வரையான பகுதியில் தென்புறம் உள்ள பகுதியில் பல குடும்பங்கள் குடிநீர் இணைப்பின்றி தவிப்பில் உள்ளன. இப்பகுதியில் பாண்டியன் நகர், பீ.பி. சாவடி பகுதியில் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் திருமலைக்காலனி, குருசாமிநாடார் தெரு, தேனி ரோட்டோரம் உள்ள பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு இல்லை. பழைய குடிநீர் திட்டத்தில் இருந்த இப்பகுதியில் சிமென்ட் ரோடு அமைத்து தரைத்தளம் உயர்ந்துவிட்டது. பழைய இணைப்பை ரத்து செய்துவிட்டு, புதிய திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்குவதாக அறிவித்து செயல்படுத்தினர். இப்பகுதியில் மட்டும் இணைப்பு வழங்காமல் தவிர்த்து விட்டனர்.

இதுகுறித்து மாநகராட்சியில் மக்கள் பலமுறை முறையிட்டும் இணைப்பு வழங்கவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் கேன் வாட்டரை நம்பியும், பிற தெருக்களில் சென்று வீடுகளில் குடிநீர் பிடித்தும் வரவேண்டிய நிலை உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புலம்புகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us