ADDED : ஆக 09, 2025 04:10 AM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் அட்மா திட்டத்தின் கீழ் செமினிப்பட்டியில் மானாவாரி மேம்பாட்டு திட்ட ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
வேளாண் உதவி இயக்குனர் பாண்டி தலைமை வகித்தார். அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்ட மாநில திட்டங்கள் குறித்து ஓய்வு அலுவலர் குணசேகரன், ஒருங்கிணைந்த பண்ணையம், அதன் பயன்பாடுகள் குறித்து உதவி அலுவலர் பாண்டியராஜன், வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் இடுபொருட்கள், அதன் மானியம் குறித்து விளக்கினர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரியா உழவர் செயலி குறித்து பேசினார். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பூமிநாதன், அருணா தேவி செய்திருந்தனர்.
