ADDED : செப் 11, 2026 10:55 PM
அ நிறம் | அளவு
பேரையூர்: பேரையூர் அருகே பெரியவண்டாரி பாலமுருகன் 48.
விவசாயி. நேற்றிரவு அதே பகுதியில் மெய்யனுாத்தம்பட்டி அருகே வந்தபோது இவரது டூவீலரில் பெட்ரோல் தீர்ந்துவிட்டது. டூ வீலரை மரத்தடியில் நிறுத்திவிட்டு அருகில் உள்ள பெட்ரோல் பங்குக்கு சென்று பெட்ரோல் வாங்கிக்கொண்டு டூவீலர் அருகே வந்தபோது, மின்னல் தாக்கி இறந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
