நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி ஜன.21-: சொக்கம்பட்டி விவசாயி சின்னதம்பி 46. இவர் நேற்று மாலை கொட்டாம்பட்டி சந்தையில் இருந்து அதே ஊரை சேர்ந்த சண்முகவள்ளியை 45, டூவீலர் அழைத்து சொக்கம்பட்டிக்கு திரும்பினார்.
வலைச்சேரிபட்டி விலக்கில் திரும்பியபோது திருச்சியில் இருந்து -மதுரை நோக்கி சென்ற டூவீலர் மோதியதில் சின்னத்தம்பி இறந்தார். காயமடைந்த சண்முகவள்ளி மேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்

