/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பிரச்னைகள் குறித்து விவசாயிகள் கலெக்டரிடம் முறையீடு
/
பிரச்னைகள் குறித்து விவசாயிகள் கலெக்டரிடம் முறையீடு
பிரச்னைகள் குறித்து விவசாயிகள் கலெக்டரிடம் முறையீடு
பிரச்னைகள் குறித்து விவசாயிகள் கலெக்டரிடம் முறையீடு
ADDED : பிப் 22, 2025 05:36 AM
டி.ஆர்.ஓ. ராகவேந்திரன், கூட்டுறவு இணைப்பதிவாளர் சதீஷ்குமார், நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாரதிதாசன், வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் முருகேசன், வேளாண் துணை இயக்குநர் சாந்தி கலந்து கொண்டனர். கூட்டம் துவங்கியதும் சென்ற மாத மனுக்களுக்கான தீர்வை வாசிப்பதற்கு முன்பாக நுாறுநாள் வேலைத்திட்டம் குறித்து கலெக்டரிடம் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ரூ.65 முதல் ரூ.80 வரை கமிஷன்
பல்வேறு பிரச்னைகள் குறித்து விவசாயிகள் பேசியதாவது:
நுாறுநாள் வேலை திட்ட பணியாளர்கள் மரநிழலில் சொக்கட்டான் விளையாடுகின்றனர். ஒவ்வொரு முறை குறைதீர் கூட்டத்தில் தெரிவிக்கும் போதும் 'அரசு கொள்கை முடிவு' என்று நீங்கள் (கலெக்டர்) சொல்லி சமாளிக்கிறீர்கள். நீங்களே முடிவெடுத்து விவசாயப்பணிகள் பாதிக்காமல் நுாறு நாள் வேலை திட்டத்தை தள்ளி வையுங்கள். இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
நெல் கொள்முதல் மையங்களில் வெளியூர் வியாபாரிகள் நெல்லை விற்கின்றனர். இதை விவசாய அலுவலர், வி.ஏ.ஓ.,க்கள் தான் கண்காணிக்க வேண்டும். இந்த முறை தட்பவெப்பநிலை மாற்றத்தால் விளைச்சல் பாதியாக குறைந்துள்ளதால் அரசிடம் இழப்பீடு கோரியுள்ளோம்.
மையத்தில் வெளியூர் நெல் வருவதால் விளைச்சலுக்கு பாதிப்பில்லை என அதிகாரிகள் எங்களுக்கு இழப்பீடு வழங்கமாட்டார்கள்.
மையத்தில் அரசியல் தலையீடு அதிகமாக உள்ளதால் தாலுகா அளவில் விவசாயிகளை ஒருங்கிணைத்து கமிட்டி அமைக்க வேண்டும். கொள்முதல் மையங்களில் ஒரு மூடைக்கு ரூ.65 முதல் ரூ.80 வரை கமிஷன் கேட்டு மிரட்டுகின்றனர். அதை நிறுத்த வேண்டும்.
நழுவும் அதிகாரிகள்
நீர்வளத்துறை சார்பில் நீர்ப்பாசனதாரர் சங்கத்திற்கு தேர்தல் நடத்தியதோடு சரி. இதுவரை ஒரு கூட்டம்கூட நடக்கவில்லை. இதற்கென நிதி ஒதுக்கப்பட்டும் விவசாயிகளுக்கு பயனில்லை. கண்மாய், வரத்து கால்வாய்கள், மடைகள், கலுங்குகளில் சேதம் என்று மனு கொடுத்தால் 'அடுத்த நிதியாண்டில் செயல்படுத்துவோம்' என நீர்வளத்துறையினர் எளிதான பதில் சொல்லி நழுவுகின்றனர்.
பட்ஜெட் துவங்குவதற்கு முன்பாக எந்தெந்த கால்வாயில் பிரச்னை என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து பட்டியல் தயாரித்து செயல்படுத்த வேண்டும் என்றனர்.
ஒரு ரூபாய் கூட கமிஷன் தரவேண்டாம்
கலெக்டர் பேசியதாவது: மாவட்டத்தில் நெல்சாகுபடி அதிகமாகவும் பயறு, எண்ணெய் வித்துகளின் உற்பத்தி குறைவாகவும் உள்ளது. நெல் அறுவடைக்கு பின் பயறு வகைகளை சாகுபடி செய்தால் கூடுதல் வருமானம் கிடைப்பதோடு மண்வளமும் அதிகரிக்கும். வெளியூர் வியாபாரிகளுக்கு உள்ளூர் விவசாயிகளின் அடங்கல் கிடைப்பதால் தானே நெல்லை விற்கமுடிகிறது.
உங்களுக்கு எதிராக செயல்படுபவர்களை கண்டுபிடித்து சொன்னால் நடவடிக்கை எடுக்கப்படும். மூடைக்கு ஒரு ரூபாய் கூட கமிஷன் தரவேண்டாம் என ஒவ்வொரு கூட்டத்திலும் சொல்கிறேன். விவசாயிகளாக சேர்ந்து 'பணம் கொடுக்க மாட்டேன்' என்று சொல்லுங்கள். கால்வாய், கலுங்கு சீரமைப்பிற்கு நீர்வளத்துறை பட்டியல் தயாரிப்பதோடு பாசனதாரர் சங்கக் கூட்டம் நடத்த வேண்டும் என்றார்.
நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாரதிதாசன் பேசுகையில் ''மார்ச் 2வது வாரத்தில் நீர்ப்பாசனதாரர்கள் சங்க பிரதிநிதிகளுடன் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்'' என்றார்.

