/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஒருமாதமாக மறுகால் செல்லும் பாலமேடு சாத்தையாறு அணை விவசாயிகள் மகிழ்ச்சி

ADDED : ஜன 13, 2025 06:48 AM

பாலமேடு : பாலமேடு சாத்தையாறு அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் ஒரு மாதமாக அணையில் மறுகால் பாய்ந்து வருகிறது.
இந்த அணைக்கு திண்டுக்கல் சிறுமலை பகுதிகளில் இருந்து நீர் வரத்து தொடர்கிறது. கடந்த அக்.26ல் அணை மறுகால் பாய்ந்ததை தொடர்ந்து, பாசன வசதி பெறும் 10 கண்மாய்களுக்கு 28ல் அணை திறக்கப்பட்டது. அனைத்து கண்மாய்களும் நிரம்பிய நிலையில் அணையின் நீர்மட்டம் 10 அடியாக குறைந்தது.
கடந்த மாதம் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து டிச.17ல் மறுகால் பாய துவங்கியது. தொடர் நீர்வரத்தால் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து மறுகால் செல்கிறது. இதனால் பெரிய ஊர்சேரியை தொடர்ந்து, தேவசேரி கண்மாய்க்கும் விவசாயிகள் வாய்க்கால் வெட்டி தண்ணீரை கொண்டு செல்கின்றனர். செல்லுார் கண்மாய், வைகைக்கு சென்று வீணாக வேண்டிய நீரை கண்மாய்களில் நிரப்புவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.