ADDED : மார் 13, 2026 05:46 AM
அ நிறம் | அளவு
மேலுார்: கொட்டக்குடியில் எடையிட்ட நெல்லை கோடவுனுக்கு கொண்டு செல்லாமல் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல்மூடைகள் எட்டு நாட்களாக தேங்கி கிடந்தது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதித்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சரவணன் ஏற்பாட்டின் பேரில் நெல்மூடைகள் கோடவுனுக்கு கொண்டு செல்லப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். பெயரளவுக்கான நடவடிக்கையாக இல்லாமல், அனைத்து மூடைகளையும் கோடவுனுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.
