/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கொள்முதல் மையத்தில் 'பதர் நெல்' கலப்படம் செய்யும் அதிகாரிகள்; குறைதீர் கூட்டத்தில் குமுறிய விவசாயிகள்

ADDED : பிப் 19, 2025 04:01 AM
மேலுார் : மேலுார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செந்தாமரை தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் 'பதர்' நெல்லை கலப்படம் செய்து மூடையாக்கி விவசாயிகள் பெயரில் சம்பாதிக்கின்றனர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலுார் பகுதியில் கொள்முதல் செய்யும் நெல்லை ஆய்வு செய்து முறைகேடு செய்வோர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் மூடைக்கு ரூ. 40 முதல் ரூ.70 வரை விவசாயிகளிடம் முறைகேடாக வசூலிக்கின்றனர். பெரிய அருவி நீர் தேக்கத்திற்கு வரும் நீர்வழிப் பாதை, நீர் தேக்க ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சிங்கம்புணரி நீட்டிப்பு கால்வாயை பராமரிப்பு செய்ய வேண்டும். தென்னையில் பாதிப்பு உண்டாக்கும் வெள்ளை ஈக்களை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் தர மறுக்கின்றனர். மேலவளவில் நீர்வளத் துறைக்கு சொந்தமான வேப்பனேரி கண்மாயை சரி செய்யாமல் சரி செய்ததாக கூறும் நீர்வளத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். விவசாயிகள் பழனிச்சாமி, மணி, அருண், சிதம்பரம், ராஜேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.