/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உலர் களத்தில் மது அருந்தும் சமூகவிரோதிகள்: விவசாயிகள் புகார்
/
உலர் களத்தில் மது அருந்தும் சமூகவிரோதிகள்: விவசாயிகள் புகார்
உலர் களத்தில் மது அருந்தும் சமூகவிரோதிகள்: விவசாயிகள் புகார்
உலர் களத்தில் மது அருந்தும் சமூகவிரோதிகள்: விவசாயிகள் புகார்
ADDED : ஜூலை 09, 2025 07:08 AM
திருமங்கலம் : திருமங்கலம் தாலுகாவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாசில்தார் சுரேஷ் தலைமையில் நடந்தது. இதில் விவசாயி வெள்ளையன் பேசுகையில், ''ராஜபாளையம் ரோட்டில் அமைக்கப்படும் 4 வழிச்சாலையால் ஆலம்பட்டி கிராமத்தில் துாசி அதிகம் கிளம்புகிறது. அதேபோல் திருமங்கலம் தற்காலிக பஸ் ஸ்டாண்டிலும் புழுதி மண்டலமாக பறக்கிறது. அதை தவிர்க்க அப்பகுதியில் அடிக்கடி தண்ணீர் தெளிக்க வேண்டும், என்றார்.
விவசாயி வெள்ளையத்தா பேசுகையில், ''மறவன்குளம் கண்மாய் இதுவரை துார்வாரப்படவில்லை. இதனால் இந்த பகுதிக்கு பகுதிக்கு வைகை தண்ணீர் வரவில்லை. கிராமத்தில் உள்ள உலர் களத்தில் சமூக விரோதிகள் இரவு நேரத்தில் மது அருந்துவதோடு பாட்டிலை உடைத்து போட்டு செல்கின்றனர். இதனால் களத்தை விவசாயிகள் பயன்படுத்த முடியவில்லை.
அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு சீரமைக்க வேண்டும் என்றார்.
விவசாயி ஜெயக்குமார் பேசுகையில் :
எங்கள் பகுதி கண்மாயில் கழிவு நீர் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. தண்ணீர் மூலம் தொற்று நோய் பரவும் முன்பாக தடுக்க வேண்டும் என்றார். விவசாயி பால்பாண்டி பேசுகையில், ''எங்கள் பகுதி சுடுகாடு சேதம் அடைந்துள்ளது. அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார். கடந்தாண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு இழப்பீடு கிடைக்கவில்லை'' என்றார்.