நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுாரில் முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாய சங்க ஆலோசனை கூட்டம் தலைவர் முருகன் தலைமையில் நடந்தது.
செயலாளர் ரவி, பொருளாளர் ஜெயபால் முன்னிலை வகித்தனர். முல்லை பெரியாறு வைகை அணைகளில் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் வகையில் உள்ளதால் செப். முதல் ஜன. 15 வரை தண்ணீர் வழங்க வேண்டும்.
பெரியாறு பிரதான கிளை மற்றும் பிரிவு கால்வாய்களை நீர்வளத்துறையினர் சுத்தம் செய்ய வேண்டும். பாசனத்திற்கு தண்ணீர் திறந்ததும் 60 நாட்களுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்.
அலங்காநல்லுார் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும். மேலுார் பஸ் ஸ்டாண்ட் முன்பு பென்னிகுவிக் சிலையை அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விவசாயிகள் குறிஞ்சிகுமரன், ஸ்டாலின், கிருஷ்ணன், அசோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.