/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பயிர்களை காப்பாற்ற மானியத்தில் சோலார் மின்வேலி விவசாயிகள் கோரிக்கை
/
பயிர்களை காப்பாற்ற மானியத்தில் சோலார் மின்வேலி விவசாயிகள் கோரிக்கை
பயிர்களை காப்பாற்ற மானியத்தில் சோலார் மின்வேலி விவசாயிகள் கோரிக்கை
பயிர்களை காப்பாற்ற மானியத்தில் சோலார் மின்வேலி விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஜூலை 09, 2025 06:59 AM

பாலமேடு :  பாலமேடு பகுதி விவசாயிகள் பயிர்களை பாதுகாக்க மானியத்தில் சோலார் மின்வேலி அமைக்க வேளாண் துறை முன்வர வேண்டும்.
இப்பகுதி மலை அடிவாரங்களில் பூக்கள், கொய்யா, மா, பப்பாளி, வெள்ளரி மற்றும் காய்கறி, பழ வகைகள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன. இதை காட்டு மாடுகள், காட்டுப் பன்றிகள் சேதப்படுத்துகின்றன. பழங்களை குரங்குகள் நாசம் செய்கின்றன.
பாலமேடு சாத்தையாறு அணை பகுதி விவசாயி வீரன்: குரங்குகள் கூட்டத்தால் கொய்யா, பப்பாளி பழங்களை பாதுகாக்க முடியவில்லை. விலங்குகள் சேதப்படுத்தும் பகுதிகளை புகைப்படம் எடுத்து வனத்துறையிடம் விண்ணப்பித்தால் குறைந்த இழப்பீடு கிடைக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு அலைச்சல் ஏற்படுகிறது. வேளாண்துறை மானியத்தில் சோலார் மின்வேலி வழங்கினால்,விலங்குகளை வேலி எச்சரிக்கும், ஆபத்து ஏற்படாது. பயிர்களை பாதுகாக்கலாம் என்றார்.
வேளாண் பொறியியல் துறை அலுவலர் கூறுகையில், ''மானியத்தில் சோலார் மின்வேலி வழங்கப்படுகிறது. வனப்பகுதியில் இருந்து 5 கி.மீ.,க்குள் இருந்தால் வனத்துறையின் தடையில்லா சான்று பெற வேண்டும். கூடுதல் துாரம் என்றால் சான்று தேவை இல்லை. விவசாயிகள் மதுரை வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம்'' என்றார்.

