ADDED : மார் 05, 2024 04:36 AM
திருமங்கலம், : கள்ளிக்குடியில் வேளாண்மை துறை சார்பில் பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் விவசாயிகள் கண்காட்சி நடந்தது. வேளாண் இணை இயக்குனர் சுப்புராஜ் தலைமை வகித்தார். கள்ளிக்குடி ஒன்றிய தலைவர் மீனாட்சி முன்னிலை வகித்தார். கள்ளிக்குடி வேளாண் உதவி இயக்குனர் சந்திரகலா வரவேற்றார்.
கள்ளிக்குடி வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் ராமமூர்த்தி பேசினார்.
வேளாண் துணை இயக்குனர்கள் அமுதன், ராணி, மெர்சி ஜெயராணி, மேரி ஐரின் ஆக்னிடா, தோட்டக்கலை துணை இயக்குனர் ரேவதி, வேளாண் கல்லுாரி அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், வேளாண் உதவி இயக்குனர் சக்தி கணேஷ் பேசினர்.
முன்னோடி விவசாயிகள் சுப்புலட்சுமி, வேலுச்சாமி, கண்ணன் விவசாயத்தின் நவீன தொழில்நுட்பங்கள் குறித்தும் அதை பயன்படுத்துவது குறித்தும் பேசினர். இயற்கை தானிய வகைகள் மற்றும் அவற்றின் நன்மைகள் குறித்தும் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. துணை வேளாண் அலுவலர் குமாரி லட்சுமி நன்றி கூறினார்.
