/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தொழிலாளர் பற்றாக்குறை பரிதவிக்கும் விவசாயிகள்
/
தொழிலாளர் பற்றாக்குறை பரிதவிக்கும் விவசாயிகள்
ADDED : ஆக 04, 2025 04:49 AM

சோழவந்தான்: 'சோழவந்தான் அருகே நாச்சிகுளம் பகுதியில் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் விவசாய பணிகள் பாதிக்கிறது' என அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
விவசாயி நாகூர் கனி கூறியதாவது: நாச்சிகுளம் பகுதியில் முல்லையாறு நேரடி பாசனம் மூலம் 300 ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதியில் விவசாயம் நடக்கிறது. சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமானோர் விவசாய பணிகளில் ஈடுபடுவர். காலை 8:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை வேலை செய்வர். ஆண்களுக்கு ரூ.500, பெண்களுக்கு ரூ. 250 ஊதியம் வழங்கப்படும். தற்போது முதல் போக சாகுபடிக்காக நீர் திறந்துள்ள நிலையில் நாற்று நடுவதற்கு, களை எடுப்பதற்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது.
அனைத்து கிராமங்களிலும் 100 நாள் வேலை திட்டத்திற்கு பெண்கள் சென்று விடுவதால் சாகுபடி பணிகள் பாதிக்கிறது. சாகுபடி காலங்களில் 100 நாள் வேலைத்திட்ட பணிகளை தள்ளி வைப்பதன் மூலம் ஆட்கள் பற்றாக்குறையை போக்க முடியும். பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் பலனில்லை என்றார்.

