/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அதிகாரிகள் இல்லாமல் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம்
/
அதிகாரிகள் இல்லாமல் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம்
அதிகாரிகள் இல்லாமல் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம்
அதிகாரிகள் இல்லாமல் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ADDED : ஜூலை 12, 2025 03:54 AM
உசிலம்பட்டி : உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஜூலை 8ல் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு தாசில்தார் வராததால் நேற்று மீண்டும் நடந்தது. நேற்றும் அலுவல் காரணமாக தாசில்தார் பங்கேற்காததால் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
துணைத் தாசில்தார் ராஜ்குமார் சமரசம் செய்தார். கூட்டத்திற்கு 37 துறை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்த நிலையில் 15 துறை அதிகாரிகள் மட்டுமே வந்திருந்தனர். கடந்த கூட்டத்திற்கு நகராட்சி சார்பில் துறையின் முக்கிய அதிகாரி வராத நிலையில் சுகாதார பிரிவு பணியாளர் வந்திருந்தார். நேற்றும் அவரே வந்ததால் துணைத்தாசில்தார், 'கடந்த கூட்டத்திலேயே நீங்கள் வரக்கூடாது என தெரிவித்தும், மீண்டும் வந்தீர்களே' என கடிந்து கொண்டார். பின்னர் நகராட்சி மேலாளர் வந்து 'பஸ்ஸ்டாண்ட் விரிவாக்கப்பணிகள் 2 மாதத்தில் நிறைவு பெறும். சந்தை திடலுக்குள் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்படும்' என தெரிவித்தார். உத்தப்பநாயக்கனுார் நேதாஜி நகர் மயானத்திற்கு பாதை வசதி, உரம் பூச்சி மருந்து கடைகளில் விலைப்பட்டியல் ரசீது வழங்க வேண்டும் என விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.

