/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நிலத்தடி நீர் இருப்பு விவசாயிகள் மகிழ்ச்சி
/
நிலத்தடி நீர் இருப்பு விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஏப் 21, 2025 06:20 AM
பேரையூர்: நிலத்தடி நீர் திருப்திகரமாக இருப்பதால் இறவை பாசன விவசாயிகள் கோடை சாகுபடி பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளனர்.
பேரையூர் தாலுகாவின் பல்வேறு கிராமங்களில் விவசாயம் கால்நடை வளர்ப்பே பிரதான தொழிலாக உள்ளன. வானம் பார்த்த பூமியான மானாவாரி நிலங்களில் பயறு வகைகள், எண்ணெய் வித்து, சிறு தானியங்கள் பயிரிடுகின்றனர். கடந்தாண்டு பெய்த மழையால் தாலுகாவில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பாசனக் கிணறு, போர்வெல்களில் நீர் வற்றாமல் சுரப்பதால் கோடையிலும் விவசாயம் தொடர்கிறது.
விவசாயிகள் கூறுகையில், ''கிணறுகள், போர்வெல்களில் நீர் இருப்பு போதுமான அளவு உள்ளது. இதனால் கோடையில் சாகுபடி செய்ய தயக்கம் காட்டும் விவசாயிகள், இந்தாண்டு தண்ணீர் பற்றாக்குறை இல்லாததால் காய்கறிகள், நெல் பயிரிட்டுள்ளனர். இறவை பாசன நிலங்களில் கோடை விவசாயம் சுறுசுறுப்பாக நடக்கிறது என்றனர்.