/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விவசாயிகளுக்கு அடையாள எண் ஏப். 15 வரை அவகாசம்
/
விவசாயிகளுக்கு அடையாள எண் ஏப். 15 வரை அவகாசம்
ADDED : மார் 30, 2025 03:24 AM
மதுரை : மத்திய அரசு வழங்கும் விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் பெறுவதற்கான கால அவகாசம் ஏப். 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: மாவட்டத்தில் பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் 57 ஆயிரத்து 832 விவசாயிகள் ஊக்கத்தொகை பெறுகின்றனர். இவர்களில் 33 ஆயிரத்து 193 விவசாயிகள் மட்டுமே உரிய ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து தனித்துவ அடையாள எண் பெற்றுள்ளனர். அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு மத்திய அரசின் வேளாண் ஊக்கத்தொகை வழங்கப்படாது.
மேலும் இத்திட்டத்தில் பயன்பெறாத மற்ற விவசாயிகளும் தனித்துவ அடையாள எண் பெற்றால் மட்டுமே வேளாண், வேளாண் தொடர்புடைய பிற துறைகளின் மூலம் அரசு வழங்கும் மானிய சலுகைகளை பெற முடியும்.
விவசாயிகள் கட்டணமில்லாமல் ஆன்லைனில் பதிவு செய்ய பொது சேவை மையங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராமத்திற்கு வரும் வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை, விதை சான்றளிப்புத்துறை அலுவலர்கள் மூலம் பதிவு செய்யலாம்.
சமுதாய வள பயிற்றுனர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட அலைபேசி, கம்ப்யூட்டர் சிட்டா நகல் கொண்டு செல்ல வேண்டும்.
இதற்காக ஏப். 15 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.