/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அதிக வெயில் தாக்கம் விவசாயிகள் தயக்கம்
/
அதிக வெயில் தாக்கம் விவசாயிகள் தயக்கம்
ADDED : ஏப் 23, 2025 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுற்றியுள்ள மானாவாரி பகுதி கிணறுகள், ஆழ்குழாய்களில் தண்ணீர் இருக்கும் விவசாயிகள் கோடையில் நெல் நடுவதும், காய்கறிகள், பருத்தி பயிரிடுவதும் வழக்கம்.
இந்தாண்டும் ஏராளமான விவசாயிகள் காய்கறிகள் நாற்றுகளை நட்டனர். வழக்கத்தைவிட இந்தாண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதனால் நடவுசெய்த காய்கறி நாற்றுகள் கருகின. இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர். வெயிலின் தாக்கத்தை பார்த்த விவசாயிகள் நிலங்களை தரிசாக போட்டு விட்டனர்.
அவர்கள் கூறுகையில், 'இதுபோன்று வெயில் தாக்கத்தை கண்டதில்லை. இரவு 8:00 மணி வரை நிலத்தில் வெப்பம் உள்ளது. எந்த பயிர்களும் நடவு செய்ய முடியவில்லை' என்றனர்.

