/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சடச்சிபட்டி கண்மாய்க்கு தண்ணீர் கிடைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
/
சடச்சிபட்டி கண்மாய்க்கு தண்ணீர் கிடைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
சடச்சிபட்டி கண்மாய்க்கு தண்ணீர் கிடைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
சடச்சிபட்டி கண்மாய்க்கு தண்ணீர் கிடைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜன 18, 2024 06:31 AM
உசிலம்பட்டி, : உசிலம்பட்டியின் நீராதார திட்டமான 58 கிராம கால்வாயில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வலது, இடது கால்வாய்கள் மூலம் 33 கண்மாய்களில் ஒவ்வொரு பகுதியாக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
இதில் கடைமடை கண்மாய்களான சடச்சிபட்டி, பாப்பாபட்டி பெரியகண்மாய் வழியாக சின்னக்குளம் கண்மாய்க்கு செல்லும் நிலவியல் ஓடை பல ஆண்டுகளாக துார்ந்து போய் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. கடந்த முறை தண்ணீர் திறந்த போது சின்னக்குளம் கண்மாய்க்கு தற்காலிக பாதை அமைத்து கொண்டு சென்றனர்.
அப்போது சடச்சிபட்டி கண்மாய்க்கு தண்ணீர் செல்ல கால்வாய் சீரமைப்பு பணியில் இருந்த போது, தண்ணீர் மட்டம் குறைந்ததால் கொண்டு செல்ல முடியவில்லை.
இம் முறையாவது சடச்சிபட்டி கண்மாயின் நிலவியல் நீரோடைகளை கண்டறிந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும்.
இதன் மூலம் பசுக்காரன்பட்டி, எ.புதுப்பட்டி, சி.நாட்டாபட்டி, சி.அய்யன்கோயில்பட்டி கிராமங்கள் பயனடையும் என 58 கிராம கால்வாய் பாசன விவசாயிகள் சங்கத்தினர் வருவாய், நீர்வளத்துறையினரிடம் வலியுறுத்தி உள்ளனர்.