ADDED : செப் 22, 2024 03:32 AM
மதுரை : மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டத்தில் பேரையூர், டி.கல்லுப்பட்டி விவசாயிகள் முத்துமீரான், கண்ணனுக்கு உழவர் சந்தைக்கான அடையாள அட்டையை டி.ஆர்.ஓ., சக்திவேல் வழங்கினார்.
மதுரை வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் திருமங்கலம் உழவர்சந்தையில் காய்கறி விற்பனை செய்வதற்கான அடையாள அட்டை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதாக துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
திருமங்கலம் உழவர் சந்தையில் 80 கடைகள் உள்ளன. கத்தரி, தக்காளி, வெண்டை, சுரைக்காய், பீர்க்கங்காய், சின்னவெங்காயம் பயிரிடும் விவசாயிகள் தினமும் சராசரியாக 22 பேர் 8 டன் விற்கின்றனர்.
மகளிர் சுயஉதவிக்குழு மூலம் மலைக்காய்கறிகள் விற்பனை செய்கிறோம். இதுவரை 115 விவசாயிகள் அடையாள அட்டை பெற்றுள்ளனர். இப்போது டி.கல்லுப்பட்டி, பேரயைூரைச் சேர்ந்த 15 விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது என்றார்.