ADDED : ஏப் 17, 2025 06:31 AM
மதுரை: மதுரை சொக்கிக்குளம் உழவர் சந்தை துவங்கி 25 ஆண்டுகள் ஆனதையொட்டி வெள்ளிவிழா கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது.
உழவர் சந்தைக்கு தொடர்ந்து வருகை தந்த விவசாயிகள், நுகர்வோரை கவுரவித்து, கருத்துக்களை கலெக்டர் கேட்டறிந்தார். புனரமைக்கப்பட்ட நடைமேடை, குளிர்பதன கிடங்கை திறந்து வைத்து, உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு ஒதுக்கிய கடையை பார்வையிட்டார். விவசாயிகளுக்கு புதிய மின்னணு எடை இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் வேளாண் இயக்குனர் சுப்புராஜ் முன்னிலை வகித்தார். துணை இயக்குனர்கள் மெர்சி ஜெயராணி, சாந்தி, பிரபா, விற்பனைக்குழு செயலாளர் அம்சவேணி, கவுன்சிலர் ஜெயராஜ் பங்கேற்றனர். உழவர் சந்தை நிர்வாக அலுவலர் சுரேஷ், உதவிஅலுவலர்கள் பரமேஸ்வரன், கதிரேசன், ரமீலா, பணியாளர்கள் மாரிமுத்து, பாக்கியநாதன், காதர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.