/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் யாத்திரை; மாநில முதல்வர்களிடம் ஆதரவு திரட்ட முடிவு

ADDED : பிப் 09, 2026 05:56 AM

மதுரை: மத்திய அரசுக்கு எதிராக மார்ச் 19ல் டெல்லியில் விவசாயிகள் பேரணி நடத்தவுள்ளதாக ஐக்கிய விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
எம்.எஸ்.சுவாமிநாதன் குழு, நீதிபதி நவாப்சிங் குழு பரிந்துரைகளை நிறைவேற்றுதல், வேளாண் பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன்கள் தள்ளுபடி, இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தை திரும்ப பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை விவசாயிகள் யாத்திரை செல்ல உள்ளனர்.
மதுரையில் ஐக்கிய விவசாயிகள் சங்க தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித்சிங் தல்லேவால் பேசியதாவது:
மத்திய அரசால் விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்துள்ளது. மத்திய அரசு மாநிலங்களின் ஒப்புதலோடு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
இன்று (பிப். 9) சென்னையிலும், பிப்.10ல் சேலத்திலும் விவசாயிகள் மகாசபைக் கூட்டம் நடக்க உள்ளது. அடுத்து கர்நாடகாவுக்குள் யாத்திரை செல்ல உள்ளோம்.
தமிழக முதல்வரை சந்திக்க அனுமதி கிடைத்தால் இன்று சந்திப்போம். மற்ற மாநில முதல்வர்களையும் சந்தித்து மத்திய அரசுக்கு எதிராக ஆதரவு திரட்டுவோம். மார்ச் 19ல் டெல்லி ராம்லீலா மைதானத்தில் பல லட்சம் விவசாயிகள் பங்கேற்கும் யாத்திரை நிறைவுபெறும் என்றார்.
தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் குறுபுறு சாந்தகுமார், தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் அபிமன்யூ, தமிழக தலைவர் அய்யாகண்ணு, ஆதிமூலம் பங்கேற்றனர்.