/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தண்ணீர் திறக்க விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
/
தண்ணீர் திறக்க விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 24, 2024 05:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் 58 கிராம பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் கால்வாயில் தண்ணீர் திறக்க கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உசிலம்பட்டி பகுதியின் நீராதார திட்டமாக உள்ள 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும், கால்வாய்க்கான மடையை 62 அடியில் வைத்து ஆண்டு தோறும் பயன்பெறும் வகையில் நீர்பாசன திட்டமாக மாற்ற வேண்டும், பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சங்க நிர்வாகிகள் ஜெயராஜ், சிவப்பிரகாசம், ஆசிசேஷன், அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.