ADDED : மார் 12, 2024 06:35 AM
அ நிறம் | அளவு
திருமங்கலம் : திருமங்கலத்தில் மதுரை மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசை கண்டித்து அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் மாவட்ட தலைவர் காளிதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் முத்துவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தனம் கலந்து கொண்டனர். வேளாண் விளை பொருளுக்கு குறைந்தபட்ச விலை தராத மத்திய அரசை கண்டித்தும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வரி விலக்கு அளிப்பது, மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யாமல் இருப்பது போன்ற பல்வேறு காரணங்களை கூறி ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.
