/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மழையால் அழுகிய பயிர்கள் மறு நடவு செய்யும் விவசாயிகள்
/
மழையால் அழுகிய பயிர்கள் மறு நடவு செய்யும் விவசாயிகள்
மழையால் அழுகிய பயிர்கள் மறு நடவு செய்யும் விவசாயிகள்
மழையால் அழுகிய பயிர்கள் மறு நடவு செய்யும் விவசாயிகள்
ADDED : நவ 11, 2024 04:39 AM

வாடிப்பட்டி: பரவை- - அதலை ரோட்டில் தொடர் மழையால் நெற்பயிர்கள் மூழ்கி அழுகியதால் விவசாயிகள் மறுநடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்பகுதி வைகை பெரியாறு பாசன வசதி பெறும் ஒருபோக பகுதி. நகர் பகுதியை ஒட்டிய விரிவாக்க பகுதி என்பதால் விளை நிலங்கள், விலை நிலங்களாக மாறி வருகின்றன.
இவ்வழியாக செல்லும் விளாங்குடி கண்மாய் பாசன ஓடையை ஒட்டிய கடைமடை பகுதி வயல்களில் நடவு செய்த பயிர்கள் தொடர் மழைக்கு மூழ்கின. இதனால் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்த விவசாயிகள் அழுகிய பயிர்களை உழவு செய்து மறுநடவு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயி ஆதவன் கூறுகையில், ''விளாங்குடி கண்மாய் ஓடையை துார்வாராததால் மழைநீர் வடியாமல் வயல்களில் தேங்கி 5 ஏக்கர் பயிர்கள் அழுகின.
தற்போது வேறு ஒரு பகுதியில் நடவு செய்ய அமைத்திருந்த நாற்றங்கால் பயிர்களை பறித்து மறுநடவு செய்து வருகிறேன்'' என்றார்.