/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உழவர் சந்தைகள் மூலம் 400 டன் காய்கறி; 3 நாளில் ரூ.1.8 கோடிக்கு விற்ற விவசாயிகள்
/
உழவர் சந்தைகள் மூலம் 400 டன் காய்கறி; 3 நாளில் ரூ.1.8 கோடிக்கு விற்ற விவசாயிகள்
உழவர் சந்தைகள் மூலம் 400 டன் காய்கறி; 3 நாளில் ரூ.1.8 கோடிக்கு விற்ற விவசாயிகள்
உழவர் சந்தைகள் மூலம் 400 டன் காய்கறி; 3 நாளில் ரூ.1.8 கோடிக்கு விற்ற விவசாயிகள்
ADDED : ஜன 14, 2025 11:21 PM

மதுரை: வேளாண் வணிகத்துறையின் கீழ் மதுரை மாவட்டத்தில் செயல்படும் 7 உழவர் சந்தைகளின் மூலம் (ஜன.12 - 14) 3 நாட்களில் 500 க்கும் மேற்பட்ட விவசாயிகளின் 400 டன் காய்கறிகள் ரூ.1.8 கோடிக்கு விற்பனையானது.
மதுரையில் சொக்கிகுளம், அண்ணாநகர், ஆனையூர், பழங்காநத்தம், மேலுார், உசிலம்பட்டி, திருமங்கலத்தில் விவசாயிகளின் விளைபொருட்களை விற்க உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. சொக்கிகுளத்தில் அதிகபட்சமாக 156 கடைகள், அண்ணாநகரில் 125 கடைகள் உட்பட 7 சந்தைகளில் 500 கடைகள் செயல்படுகின்றன. தினசரி குலுக்கல் முறையில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பதற்கு சுழற்சி முறையில் கடைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
தைப்பொங்கலை முன்னிட்டு ஜன.12 முதல் உழவர் சந்தைகளில் காய்கறி விற்பனை களை கட்டியது. ஜன. 12 ல் 7 சந்தைகளிலும் 100 டன் அளவுக்கு காய்கறிகள் விற்பனையானது. ஜன.13ல் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது காய்கறிகளை உழவர் சந்தைக்கு கொண்டு வந்தனர். 7 சந்தைகளிலும் வழக்கமாக 100 முதல் 110 டன் வரை காய்கறிகள் விற்பனையாகும். நேற்று முன்தினம் அதிகபட்சமாக 124 டன் அளவு காய்கறிகள் விற்பனையாயின. இதன் மதிப்பு ரூ.70 லட்சம். தீபாவளி, ஆயுதபூஜையை அடுத்து பொங்கலுக்கு தான் அதிகபட்சமாக காய்கறிகள் விற்பனையாயின.
நேற்று (ஜன.14) பொங்கலன்று 7 சந்தைகளிலும் 96 டன் காய்கறிகள் ரூ.60 லட்சத்திற்கு விற்பனையானது என்கிறார் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி.
அவர் கூறியதாவது: சொக்கிகுளத்தில் 3 நாட்களில் 4.42 டன் அளவிற்கு வாழைத்தார், வாழைக்காய், வாழையிலைகளும் அண்ணாநகரில் 3.5 டன் அளவிற்கு வாழைப்பொருட்களும் விற்பனையாயின. இதன் மொத்த மதிப்பு ரூ.20 லட்சம்.
உழவர் சந்தையில் விற்பனை செய்வதற்காகவே மேலுார் வெள்ளாளப்பட்டி, வெள்ளிமலைப்பட்டி, புலிப்பட்டி பகுதி விவசாயிகள் மஞ்சள் கிழங்கு சாகுபடி செய்திருந்தனர். அங்கிருந்து சொக்கிகுளத்திற்கு 3 டன், அண்ணாநகர் சந்தைக்கு 1.8 டன் மஞ்சள்கிழங்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. பொங்கல் விழாவுக்காக மட்டும் சாகுபடி செய்யப்படும் பச்சைமொச்சை, அவரைக்காய், சிறுகிழங்குகள் அதிகபட்சமாக அனைத்து சந்தைகளுக்கும் கொண்டு வரப்பட்டன.
மலையடிவாரத்தில் விவசாயிகள் சேகரித்த கூரைப்பூ தொகுப்பும் அதிகளவில் விற்பனையானது. இன்று (ஜன.15) அனைத்து சந்தைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
பொங்கல் விழாவுக்காக மட்டும் சாகுபடி செய்யப்படும் பச்சைமொச்சை, அவரைக்காய், சிறுகிழங்குகள் அதிகபட்சமாக அனைத்து சந்தைகளுக்கும் கொண்டு வரப்பட்டன.