sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 பயிர்க்கடன் தாமதத்தால் பரிதவிக்கும் விவசாயிகள்

/

 பயிர்க்கடன் தாமதத்தால் பரிதவிக்கும் விவசாயிகள்

 பயிர்க்கடன் தாமதத்தால் பரிதவிக்கும் விவசாயிகள்

 பயிர்க்கடன் தாமதத்தால் பரிதவிக்கும் விவசாயிகள்


ADDED : ஜன 04, 2026 05:30 AM

Google News

ADDED : ஜன 04, 2026 05:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: விக்கிரமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர் கடன்களை விரைந்து வழங்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

பென்னிகுக் விவசாய சங்கத் தலைவர் பூமிநாதன் கூறியதாவது: இங்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி 41 ல் பயிர், கறவை மாடு வளர்ப்பு, நகை,மகளிர் சுய உதவி குழுக்களுக்கான வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் கடன் தொகையை செலுத்தி விட்டால் வட்டி கட்ட தேவையில்லை. கடனை அடைத்த பின் ஒரு வாரத்திற்குள் புதிதாக பயிர் கடன் பெறலாம். இந்நிலையில் விவசாயிகள் பலர் வட்டியை தவிர்க்க வெளியே வட்டிக்கு பணம் வாங்கி 2 மாதங்களுக்கு முன்பே வங்கிக் கடனை அடைத்து விட்டனர்.

புதிதாக வாங்கும் வங்கி கடனை கொண்டு வெளி கடனை அடைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்துள்ளனர். வங்கிப் பணியாளர்கள் கடன் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதால் வெளியிடங்களில் வாங்கிய கடனுக்கான வட்டி உயர்ந்து வருகிறது. கடனை அடைத்த விவசாயிகளுக்கு விரைந்து புதிய கடன் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us