/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கண்மாயை மாசுபடுத்தும் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு விவசாயிகள் வலியுறுத்தல்
/
கண்மாயை மாசுபடுத்தும் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு விவசாயிகள் வலியுறுத்தல்
கண்மாயை மாசுபடுத்தும் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு விவசாயிகள் வலியுறுத்தல்
கண்மாயை மாசுபடுத்தும் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : டிச 04, 2024 08:30 AM
திருப்பரங்குன்றம்: மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல கூட்டம் திருப்பரங்குன்றம் அலுவலகத்தில் நடந்தது. மண்டல தலைவர் சுவிதா தலைமை வகித்தார். மேயர் இந்திராணி பொன் வசந்த், துணை மேயர் நாகராஜன், பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றனர்.
திருப்பரங்குன்றம் மயானத்தில் மின் விளக்குகள் எரிவதில்லை. நகர் முழுவதும் கூடுதலாக இலவச கழிப்பறை கட்டடங்கள் கட்ட வேண்டும். 97வது வார்டில் அனைத்து இரும்பு மின் கம்பங்களின் அடிப்பகுதி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன. அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மனு அளித்தனர்.
மாடக்குளம் கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் மாரிச்சாமி அளித்த மனு:
மாநகராட்சி 71, 72 வது வார்டுகளில் முத்துப்பட்டி பிரதான கால்வாய் உள்ளது. விவசாய நிலங்களின் பாசன கால்வாயாகவும் உள்ளது. 71 வது வார்டு கந்தன் சேர்வை நகர் முதல், 72வது வார்டு திருவள்ளுவர் நகர் வரை கால்வாய்க்குள் அனைத்து கழிவு நீரும் விடப்படுகிறது. இந்தக் கழிவு நீர் முத்துப்பட்டி கண்மாய்க்கு செல்கிறது. அதனால் முத்துப்பட்டி கண்மாய் மாசடைந்து நோய் பரப்பும் மையமாகிறது. விவசாயம் செய்ய முடியவில்லை. நீர்வரத்து கால்வாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் எனத் தெரிவித்து இருந்தார். ''பொது மக்களின் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்'' என மேயர், துணை மேயர் உறுதியளித்தனர்.