/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எச்சரித்தனர் விவசாயிகள் பணிந்தனர் அதிகாரிகள்
/
எச்சரித்தனர் விவசாயிகள் பணிந்தனர் அதிகாரிகள்
ADDED : ஏப் 13, 2025 06:29 AM
உசிலம்பட்டி : உசிலம்பட்டியில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவாசாயிகள் போராட்டம் நடத்துவோம் என அறிவித்ததைத் தொடர்ந்து சந்தை திடலுக்குள் துப்புரவு பணி நடந்தது.
சந்தை திடல் பராமரிப்பு ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதை எதிர்த்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை காரணம் காட்டி சந்தைக்குள் துப்புரவு பணிகளை ஊராட்சி, நகராட்சி நிர்வாகத்தினர் செய்யாமல் புறக்கணித்து வருவதால், கழிவுநீர் கால்வாய், வெளியேறாமல் தேங்கும் மழைநீர், குவியும் குப்பை என சுகாதாரமற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
துாய்மை பணிகளை நடத்த வேண்டும், இல்லையென்றால் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் அறிவித்தனர். இதைதொடர்ந்து நேற்று சந்தை திடலுக்குள் உள்ள கழிவுநீர் கால்வாய் சுத்தப்படுத்தும் பணியில் நகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

