/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
களை எடுக்க ஆளில்லை கவலையில் விவசாயிகள்
/
களை எடுக்க ஆளில்லை கவலையில் விவசாயிகள்
ADDED : நவ 24, 2025 06:13 AM
மேலுார்: மேலுார் ஒருபோக பாசன பகுதியில் நெற்பயிரில் களையெடுக்க வேலையாட்கள் கிடைக்காததால் மகசூல் குறையும் அவலம் நிலவுகிறது.
இப்பகுதிக்கு செப். 18ல் தண்ணீர் திறக்கப்பட்டு விவசாய பணி நடக்கிறது. நெல் பயிரிட்ட 20 மற்றும் 30வது நாளில் பயிர்களுக்கு இடையே வளரும் களையை அகற்ற வேண்டும். அப்போதுதான் நெற்பயிரின் வேர் பகுதியில் பக்க கன்றுகள் வளர்ந்து அதிக மகசூல் கிடைக்கும். இல்லாதபட்சத்தில் பயிர்களுக்கு கொடுக்கும் சத்துக்கள் அனைத்தையும் களைகள் எடுத்து கொள்ளும். இதனால் நெற்பயிர் வளர்ச்சியும் மகசூலும் குறையும்.
விவசாயிகள் கூறியதாவது: ஒரு ஏக்கருக்கு களை எடுக்க 10 பேர் தேவைப்படும். கடந்தாண்டு களை எடுக்க சம்பளம் ரூ.150 இருந்த நிலையில் இந்தாண்டு ரூ.250 கொடுத்தும் வர மறுக்கின்றனர். அதனால் நுாறு நாள் வேலை செய்பவர்களை விவசாய பணிக்கு பயன்படுத்துவதோடு அவர்களுக்கு பாதி சம்பளம் விவசாயியும், மீதி சம்பளம் அரசும் வழங்கினால் வேலை ஆட்கள் பற்றாக்குறையும், செலவும் குறையும் என்றனர்.

