/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நெல் மூடைக்கு கூலி ரூ.60 கலங்கும் விவசாயிகள்
/
நெல் மூடைக்கு கூலி ரூ.60 கலங்கும் விவசாயிகள்
ADDED : பிப் 01, 2025 05:26 AM

மேலுார்:கல்லம்பட்டி நெல் கொள்முதல் நிலையத்தை பராமரிப்பவர்கள் மூடைக்கு ரூ. 60 வாங்குவதாக புகார் எழுந்துள்ளது.
இங்குள்ள நுகர்பொருள் வாணிபக் கழக நெல் கொள்முதல் நிலையத்திற்கு சின்ன சூரக்குண்டு, அரிட்டாபட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து கொண்டு வரப்படும் நெல்லை உலர்த்தி சுத்தப்படுத்தி எடை வைத்து ஏற்றுவதற்கு 40 கிலோ எடை கொண்ட மூடைக்கு (கையாளுதல் மற்றும் ஏற்று கூலிக்கு) அரசுக்கு ரூ. 10 கொடுக்கின்றனர். ஆனால் கொள்முதல் நிலையத்தை பராமரிப்பவர்கள் கூடுதலாக வசூலிக்கின்றனர்.
விவசாயி செந்தில்குமார்: ஏக்கருக்கு ரூ.32 ஆயிரம் செலவு செய்து நெல் உற்பத்தி செய்துள்ள நிலையில் 20 மூடைகள் மட்டுமே மகசூல் கிடைத்துள்ளன.
இந்நிலையத்தில் வட மாநிலத்தவரை நியமித்துள்ளனர். மேலும் கையாளும் கூலியாக மூடைக்கு அரசு ரூ.10 கொடுத்தது போக ரூ. 60 கட்டாயப்படுத்தி வசூலிப்பதால் விவசாயிகள் நஷ்டம் அடைகிறோம். அதனால் கலெக்டர் நேரில் விசாரித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்றார்.