ADDED : டிச 13, 2025 06:26 AM

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றியம் பண்ணைகுடி ஊராட்சியில் துவக்கப்பள்ளி இரண்டு வகுப்பறை கட்டடத்தில் செயல்படுகிறது.
கடந்த 2023ல் ரூ.22 லட்சத்தில் கட்டப்பட்டு 2024 பிப்.,23ல் பள்ளி திறக்கப்பட்டது. இப்பள்ளி முன்புறம் குறைந்த அளவு இடமும் அடுத்து வடிகால் உள்ளது. பாதுகாப்பு வேலி இல்லாததால் பள்ளி வராண்டாவில் மாடுகள், நாய்கள் படுத்து ஓய்வெடுப்பதும், சாணம், சிறுநீர் கழித்து செல்கிறது. துவக்கப்பள்ளி சிறுவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.
மேலும் இப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கான கழிப்பறையில் மாணவர்களுக்கானது பயன்பாட்டில் இல்லை. இருப்பினும் அதை ரூ.82 ஆயிரத்திற்கும், மற்றொன்றை ரூ.41 ஆயிரத்திற்கும் மராமத்து பணிகள் செய்துள்ளனர். பணிகள் செய்தும் பயன்பாட்டிற்கு வரவில்லை. ஊராட்சிகளில் பயன்படாத கட்டடங்களில் மராமத்து பணி என நிதியை பயன்படுத்தி கொள்கின்றனர். பள்ளிக்கு பாதுகாப்பு வேலி அமைக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
