UPDATED : அக் 15, 2026 05:57 PM
ADDED : அக் 15, 2026 05:55 PM
அ நிறம் | அளவு
மதுரை: மீன்வளத்துறை சார்பில் பண்ணைக்குட்டை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.
250 சதுரமீட்டர் முதல் 1000 சதுரமீட்டர் பரப்பளவில் பண்ணைக்குட்டை அமைக்கலாம். ஆயிரம் எண்ணிக்கையில் மீன்குஞ்சுகள், அவற்றுக்கான தீவனம், உரம், பண்ணை உபகரணங்கள், பறவைத் தடுப்பு வேலி அமைப்பதற்கு ரூ.20ஆயிரம் வரை செலவாகும். இதில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் மதுரை சிம்மக்கல் பேச்சியம்மன் படித்துறை ரோட்டில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். போன் எண்: 0452 – 234 7200.
