நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: கோழிப் பண்ணை விவசாயிகளுக்கு உரிய கூலி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி உள்ளிட்டோரை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து உசிலம்பட்டியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
மாநில துணைத்தலைவர் உதயகுமார், துணைப் பொதுச் செயலாளர் நேதாஜி, மாவட்ட நிர்வாகிகள் தமிழ்செல்வன், காராமணி, காட்டுராஜா பங்கேற்றனர்.

