/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வளர்ப்பு மகளிடம் சில்மிஷம் கொடூர தந்தைக்கு சிறை
/
வளர்ப்பு மகளிடம் சில்மிஷம் கொடூர தந்தைக்கு சிறை
ADDED : ஜூலை 18, 2025 08:45 PM
மதுரை:மதுரையில், 14 வயது வளர்ப்பு மகளிடம், நான்கு ஆண்டுகளாக சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்த தந்தை கைது செய்யப்பட்டார்.
மதுரை, மகபூப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 47. இவர் கணவரை இழந்த பெண்ணை, 2020ல் திருமணம் செய்தார். அப்பெண்ணுக்கு மகன் மற்றும், ஒன்பதாம் வகுப்பு பயிலும், 14 வயது மகள் உள்ளனர். குடும்பமாக ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
அந்த பெண்ணின் மகளிடம், 2021 முதல் ஆறுமுகம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தார். இதுகுறித்து, தாயிடம் அவர் கூற, அவர் ஆறுமுகத்திடம் கேட்டார். அப்போது, அவர் இருவரையும் தாக்கினார்.
பாலியல் சீண்டலை பொறுக்க முடியாத மாணவி, பள்ளி தலைமையாசிரியையிடம் அழுதவாறே நடந்ததை கூறினார். அதிர்ச்சியடைந்த தலைமையாசிரியை, உடனடியாக குழந்தைகள் உதவி மைய இலவச அழைப்பு, 1908 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, தகவல் அளித்தார்.
மாணவியிடம், மதுரை மாவட்ட குழந்தைகள் உதவி மைய ஆலோசகர் கவுசல்யா விசாரித்து, போலீசில் புகார் அளித்தார். ஆறுமுகத்தை மதுரை தெற்கு மகளிர் போலீசார் கைது செய்தனர்.