/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பெண் மூளைச்சாவு: 5 பேருக்கு மறுவாழ்வு..
/
பெண் மூளைச்சாவு: 5 பேருக்கு மறுவாழ்வு..
ADDED : பிப் 11, 2024 12:57 AM

தஞ்சாவூர்: திருவாரூர் மாவட்டம் எடமேலையூரை சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி பாப்பாத்தி 65.
இரு நாட்களுக்கு முன் மன்னார்குடி அருகே மேலவாசலில் நடந்த விபத்தில்பாப்பாத்தி தலையில் பலத்த காயமடைந்தார். தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார்.
பாப்பாத்தி குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். தொடர்ந்து இரண்டு கண்கள் ஒரு சிறுநீரகம் தஞ்சை அரசு மருத்துவமனைக்கும் மற்றொரு சிறுநீரகம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.
கல்லீரல் திருச்சி அரசு மருத்துவமனை நோயாளிக்கு பொருத்தப்பட்டது. பாப்பாத்தி உடலுக்கு ஆர்.டி.ஓ. இலக்கியா மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் மற்றும் டாக்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.