
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் குடும்ப பிரச்னையில் பெண் போலீஸ் சரண்யா 34, தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை நகர் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் கணவர், இரு மகள்களுடன் வசித்தவர் சரண்யா 34. கடந்த 2010ல் போலீஸ் பணியில் சேர்ந்தார். கணவன், மனைவி இடையே குடும்பத்தகராறு இருந்தது. ஆறு மாதங்களுக்கு முன் சரண்யா புகாரில் தல்லாகுளம் மகளிர் போலீசார் விசாரித்து சமரசம் செய்தனர். மூன்று மாதங்களுக்கு முன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
நேற்று மதியம் பணிக்கு வரவில்லை. சக போலீசார் அலைபேசியில் அழைத்தும் எடுக்காததால் வீட்டிற்கு சென்று பார்த்தபோது சரண்யா துாக்கு போட்டு தற்கொலை செய்திருந்தார். தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.