/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மேலபட்டியில் உரச்சத்து மேலாண்மை பயிற்சி
/
மேலபட்டியில் உரச்சத்து மேலாண்மை பயிற்சி
ADDED : ஆக 03, 2025 05:16 AM
திருமங்கலம் : கள்ளிக்குடி தாலுகா வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் மேலபட்டியில் ஒருங்கிணைந்த உரச்சத்து மேலாண்மை பயிற்சி நடந்தது.
ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்தல் குறித்து மாவட்ட அளவில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் சந்திரகலா தலைமை வகித்தார். துணை வேளாண் அலுவலர் குமாரி லட்சுமி ரசாயன உரங்களின் தீமைகள் குறித்து பேசினார். ஆராய்ச்சியாளர் பத்மபிரியா ஒருங்கிணைந்த உரச்சத்து நிர்வாகம், உயிர் உரங்களின் அவசியம், மண் மாதிரி அடிப்படையில் உரம் இடுதல் குறித்து பேசினார். உதவி அலுவலர்கள் சங்கர் கணேஷ், உமா மகேஸ்வரி பேசினர். தொழில்நுட்ப மேலாளர் இந்திரா தேவி நன்றி கூறினார். ஏற்பாடுகளை தொழில் நுட்ப ஆலோசகர்கள் லாவண்யா, யுவராஜ் செய்திருந்தனர்.