ADDED : டிச 06, 2024 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை பெசன்ட் ரோடு காஞ்சி காமகோடி மடத்தில், ஸ்ரீ விஜயேந்திரசரஸ்வதி சுவாமிகளின் மாதாந்திர நட்சத்திர விழா, உத்திராடத்தின் உன்னதம் நேற்று நடந்தது.
காலை 9:00 மணிக்கு ஆவஹந்தி ேஹாமம், சுதர்சன ேஹாமம், ஆயுஷ்ய ஹோமம் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சாய்கிருஷ்ணா புல்லாங்குழல், சிவக்குமார் வயலின், ரங்கமன்னார் மிருதங்க இசை நிகழ்ச்சி நடந்தது.
ஏற்பாடுகளை மடத்தின்தலைவர் டாக்டர் ராமசுப்பிரமணியன், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் வெங்கட்ரமணி, நிர்வாகிகள் செய்திருந்தனர்.